திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – விரைவு தரிசன டிக்கெட் ஒத்திவைப்பு!
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீட்டை தேவஸ்தானம் ஒத்திவைத்துள்ளது. மேலும் விரைவு தரிசன கோட்டாவை அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரிசன டிக்கெட்:
திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. ஆந்திரா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் இன்றி கோவில் நிர்வாக ஊழியர்கள் முன்னிலையில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு தொற்று குறைந்து வந்த போது இலவச தரிசன முறை ரத்து செய்யப்பட்டு முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்புகள் முழு அளவில் குறைந்த பிறகே இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!
முன்பதிவு அடிப்படையில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் இந்த நடைமுறை தொடர்கிறது. மாதந்தோறும் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் புதிதாக 36,571 பேருக்கு கொரோனா தொற்று – 540 பேர் உயிரிழப்பு!
ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அடுத்த மாதத்திற்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக 8,000 டிக்கெட்டுகள் முன்பதிவில் வைக்கப்படுகின்றன. இன்று செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீட்டை தேவஸ்தானம் ஒத்தி வைத்துள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து விரைவு தரிசன கோட்டாவை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால் தற்போது டிக்கெட் முன்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – விரைவு தரிசன டிக்கெட் ஒத்திவைப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3miVizi
via IFTTT
No comments:
Post a Comment