‘ரேஷன் கார்டுக்கு கைரேகை கட்டாயம்’ – ஆதார் மையங்களில் குவியும் மக்கள்!
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கைரேகை:
பொதுவாக மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் அமைந்துள்ளது. இதனால் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். சாதாரண மக்களால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்று செல்ல முடியும். ஆனால் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்களை பெற முடியாது. இதன் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
CSK Vs MI : மும்பை இந்தியன்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சென்னை! எதில் தெரியுமா?
அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டுக்கு கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரங்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இயந்திரத்தில் கைரேகை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. அதை தொடர்ந்து இந்த திட்டமானது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சிலருக்கு ஆதார் அட்டையில் கைரேகை பதிவு உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. அவர்கள் ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவும், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மொபைல் எண் இணைப்பு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவும் மக்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் மற்றும் இ-சேவை மையங்களில் கூட்டமாக திரண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ‘ரேஷன் கார்டுக்கு கைரேகை கட்டாயம்’ – ஆதார் மையங்களில் குவியும் மக்கள்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/385KJXU
via IFTTT
No comments:
Post a Comment