தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 21, 2021

பிரபல நடிகை “நல்லெண்ணெய் சித்ரா” மாரடைப்பால் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!

பிரபல நடிகை “நல்லெண்ணெய் சித்ரா” மாரடைப்பால் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!

80’ஸ்களில் பிரபல நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா இன்று மாரடைப்பால் காலமானார். இதை கேட்ட திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

நடிகை மரணம்:

சமீபத்தில் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகை நடிகர்கள் மரணம் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. 35 வயது நடிகர் முதல் வயதானவர்கள் என இறப்பு சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது 80’ஸ் திரைப்படங்களில் பிரபலமாக இருந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். அவர் ருத்ரய்யா இயக்கிய, ‘அவள் அப்படித்தான்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர்.

ஜனார்தனனிடம் கண்ணனுக்கு உதவி செய்ய கேட்கும் மீனா, உடம்பு சரி இல்லாமல் போன மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சித்ரா. டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாகவும் நடித்திருந்தார். அவரது எதார்த்தமான நடிப்பு மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இவர் படங்களில் நடித்து பிரபலமடைந்தாலும் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர் என்பதால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார்

அவர் முன்னதாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இந்த நிலையில் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் இன்று விடிகாலை காலமானார். இது கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post பிரபல நடிகை “நல்லெண்ணெய் சித்ரா” மாரடைப்பால் மரணம் – திரையுலகினர் இரங்கல்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3k74wfc
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture