தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 28, 2021

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் – ஆராய்ச்சி முடிவுகள்!

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் – ஆராய்ச்சி முடிவுகள்!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினால் ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி முடிவுகள்:

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற வைரஸின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்ததன் அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

IND vs ENG சூடு பிடிக்கும் 3ம் நாள் ஆட்டம் – 15 நிமிடங்களில் இரண்டு விக்கெட்டுகள்!

தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த பாதிப்புகள் இதை விட அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும், ஆனால், தடுப்பூசி போடாமல் விட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2.9 கோடி பேரின் தரவுகளையும், கொரோனா தொற்று ஏற்பட்ட 18 லட்சம் பேரின் தரவுகளையும் ஆராய்ச்சிக் குழு பரிசீலித்தது. இவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதை இந்த ஆராய்ச்சிக் குழு கண்காணித்தது. அஸ்ட்ராஜெனீகா (
இந்தியாவில் கோவிஷீல்டு ) தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதைவிட கூடுதலாக 107 பேருக்கு த்ராம்போசைட்டோபீனியா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டு இதே மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களைவிட 9 மடங்கு குறைவாகவே இந்த எண்ணிக்கை உள்ளது. த்ராம்போசைட்டோபீனியா ஏற்பட்டவர்களுக்கு உடலின் உள்ளே ரத்தப் போக்கு அல்லது ரத்தக் கசிவு ஏற்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதைவிட கூடுதலாக 66 பேர் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதைவிட கூடுதலாக 143 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஆனால், கொரோனா தொற்றுக்குப் பின் பக்கவாதம் ஏற்படுவோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது 12 மடங்கு குறைவு. ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து குறையவேண்டும் என்றால் கொரோனா ஏற்படுகிற ஆபத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதை இந்த ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் பேராசிரியர் அஜிஸ் ஷேக் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் – ஆராய்ச்சி முடிவுகள்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2Y7RAi1
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture