கண்ணனை நினைத்து சாப்பிடாமல் வருத்தப்படும் குடும்பத்தினர், கதறி அழும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வீட்டை விட்டு போன காரணத்தால் வீட்டில் அனைவரும் சாப்பிடாமல் இருக்கின்றனர். மூர்த்தி அனைவரையும் சமாதானம் படுத்தி சாப்பிடவைக்கிறார். கண்ணன் வெளியே சென்றதை நினைத்து தனம் மூர்த்தியிடம் சொல்லி கவலைப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வீட்டைவிட்டு போன காரணத்தால் வீட்டில் அனைவரும் சாப்பிடாமல் இருக்கின்றனர். மூர்த்தி அனைவருக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்க சாப்பிடாமல் இருக்கின்றனர். மூர்த்தி அவன் ஒரு ஆளு வெளிய போனதுக்கு சாப்பிடாமல் இருந்தால் நானும் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என்று மிரட்டுகிறார்.
பின்னர் ஜீவா, மீனா, கதிர், முல்லை, தனம் எல்லாரும் சாப்பிட மூர்த்திக்கும் தனத்தின் அம்மா சாப்பாடு வைத்துக் கொடுக்கிறார். அனைவரும் சாப்பிட்டு முடிக்க, கண்ணனும் ஐஸ்வர்யாவும் நண்பனின் சொந்தக்காரர் வீட்டில் தங்குகின்றனர். அவர்கள் மாற்றிக் கொள்ள ட்ரெஸ் கொடுக்கிறார் கண்ணனின் நண்பர். பின்னர் சாப்பாடு வாங்கி கொடுக்கிறார்.
கண்ணனும் குடும்பத்தை நினைத்து கவலைப்பட ஐஸ்வர்யா கண்ணனிற்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறார். பின்னர் லட்சுமி அம்மாவிற்கு தனம் சாப்பாடு கொண்டுபோய் கொடுக்கிறார். அவர் சாப்பிடவும் செய்யாமல் பேசவும் செய்யாமல் இருக்க கதிர் சாப்பாடு ஊட்டுகிறார். அப்போதும் சாப்பிட மறுக்க மூர்த்தி வந்து பேசுகிறார். வெளியே போய் என்ன கஷ்டப்படுறனோ எங்கே தங்குறானோ என்று வருத்தப்படுகிறார்.
நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் – பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!
மூர்த்தி சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். தனம் அவருக்கு மருந்து எடுத்து கொடுக்கிறார். பின்னர் தனமும் மூர்த்தியும் தூங்க செல்ல, தனம் நான் குழந்தை நினைப்பில் இருந்ததால் தான் இவ்வளவு நடந்துள்ளது என்று வருத்தப்படுகிறார். அவனிடம் பேசியிருந்தால் இப்படி எதுவும் ஆகி இருக்காது என சொல்லி அழுகிறார். இருந்தாலும் அவன் இப்படி செய்யக்கூடாது சரியாக வளர்க்கவில்லை என மூர்த்தி சொல்கிறார். தனம் நடந்ததை நினைத்து அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கண்ணனை நினைத்து சாப்பிடாமல் வருத்தப்படும் குடும்பத்தினர், கதறி அழும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3CEEyIw
via IFTTT
No comments:
Post a Comment