லட்சுமி கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், அஞ்சலியை நினைத்து சந்தோசப்படும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி லட்சுமியை நினைத்து கோபப்படுகிறார். சின்ன குழந்தையிடம் பொய் பேச சொல்லி கொடுத்து வச்சுருக்காளே என்று நினைக்கிறார். சௌந்தர்யா குடும்பத்துடன் பாரதி ஏன் இப்படி செய்கிறான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி ஸ்டெதஸ்கோப் வைத்து தனது இதய துடிப்பை கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதி அங்கே வர அவருக்கு இதய துடிப்பை பார்க்கிறார். என் அம்மாவிற்கு இது போல பார்த்தால் சூப்பரா இருக்கும் என்று சொல்ல, உன் அம்மாவிற்கு இதயமே இல்லையே கேக்காமல் கூட போகலாம் என்று பாரதி நினைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் லட்சுமியை எவ்வளவு சந்தோசமாக பார்த்துக் கொண்டேன் என ஆனால் அவளும் பொய் சொல்லுகிறாள் என்று நினைக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
அவள் என்ன செய்வாள் சின்ன குழந்தைக்கு என்ன சொல்லி தருகிறோமோ அதை தான சொல்லும் என நினைக்கிறார். அதன் பின்னர் சௌந்தர்யா, வேணு, அஞ்சலி, அகில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பாரதி ஏன் லட்சுமியை இங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கான் என்று தெரியவில்லையே, ஒரு வேலை அவனுக்கு கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்ற உண்மை தெரிந்துவிட்டதா, அப்படி தெரிந்தால் அவன் பயங்கரமாக சண்டை போடுவானே, ஏற்கனவே சமையல் அம்மா தான் கண்ணம்மா என்று தெரிந்ததற்கு எப்படி சண்டை போட்டான் என்று சொல்கிறார்.
கண்டிப்பா இவனுக்கு கண்ணம்மா தான் லட்சுமி அம்மா என்று தெரிந்திருக்க வேண்டும் அல்லது சந்தேகம் வர வேண்டும். ஆனால் அதற்கு நம்மளால என்ன பண்ண முடியும், சரி அவனாக வந்து கேட்கும் வரை நம்ம யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். கண்ணம்மா லட்சுமி ஸ்கூல் பக்கம் செல்ல, ஸ்கூல் மிஸ், லட்சுமி உடல்நிலை பற்றி கேட்கின்றனர். பாரதி உதவி செய்த விஷயத்தை சொல்கின்றனர். பின்னர் ஹேமாவும் இங்கேயே படிக்க போகிறாள் என்று சொல்கின்றனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ‘ஸ்மார்ட் விஷன்’ கண் கண்ணாடி- மதுரை அரவிந்த் மருத்துவமனையில் அறிமுகம்!
அதை கேட்டு கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் வெண்பா ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்க சாந்தி பால் கொண்டு வருகிறார். வெண்பா பழத்தை கட் செய்து பாலில் போடுகிறார். என்ன என்று சாந்தி கேட்க அஞ்சலி வயிற்றில் வரும் குழந்தை அவளது உயிரை பறிக்க இருக்கு என்று சொல்ல, உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்கிறார். நான் அவளை சோதித்து பார்க்கும் போது கண்டுபிடித்தேன் என்று சொல்ல, சௌந்தர்யாவிற்கு ஒரு மருமகள் ஓடிவிட்டாள் இன்னொரு மருமகள் சாக போகிறாள் என்று சொல்லி சிரிக்கிறார்.
பாரதியை பார்க்க மருத்துவமனை செல்ல அங்கே அவர் சோகத்தில் உக்காந்து இருக்கிறார், என்னாச்சு பாரதி என்று கேட்க எல்லாரும் என்னை ஏமாத்துகிறார்கள். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என தெரியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். இதை கேட்ட வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post லட்சுமி கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், அஞ்சலியை நினைத்து சந்தோசப்படும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2XviM9Q
via IFTTT
No comments:
Post a Comment