மஹாவிற்கு சீமந்தம் வைக்க ஆசைப்படும் நாச்சியார், கொந்தளிக்கும் வடிவு – இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று அனைவரும் சொத்துக்களை வடிவிற்கு கொடுக்க கையெழுத்து போடுகின்றனர். மஹாவிற்கு சீமந்தம் வைக்க நாச்சியார் ஆசைப்படுகிறார். அதனை கேட்டு வடிவு கொந்தளிக்கிறார்.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன் குடும்பத்தினர் அனைவரும் சொத்துக்களை கொடுக்க கையெழுத்து போடுகின்றனர். மஹா மற்றும் கத்தி இருவரும் கையெழுத்து போடாமல் இருப்பதால் இருவரையும் கையெழுத்து போட சொல்லி மாசாணி வற்புறுத்துகிறார். இதனால் அவர்களும் கையெழுத்து போடுகின்றனர். பின்னர், மாயன் தான் செய்த செயலுக்காக வருத்தம் அடைகிறார். தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பாக அமர்ந்து அழுகுகிறார். இதனை பார்க்கும் மஹாவிற்கு கோபம் வருகிறது.
கோவிலுக்கு செல்லும் சரவணன், சந்தியா இடையே வெளிப்படும் காதல் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
மாயன் தன்னை நம்பியவர்கள் அனைவரையும் ஏமாற்ற மட்டுமே செய்கிறார் என்றும், நாச்சியார், மற்றும் தங்கைகள் அனைவரும் அவரை மொத்தமாக நம்பி இருப்பதாகவும் கூறுகிறார். அவர்களை நன்றாக பார்த்து கொள்ளும்படி மஹா வற்புறுத்துகிறார். பின்னர், மாயன் தனது மாமனார் வீட்டிற்கு செல்லுகிறார். இனி அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதாக மாயன் கூறும் போது அவரது மாமனார் இனி தான் அனைத்து பிரச்சனைகளும் வர போகிறது என்று கூறுகிறார். இதனை கேட்டு குழம்பும் மாயன், அவரிடம் என்னவென்று கேட்கிறார். இனி மூன்று தங்கைகளுக்கு துணிமணிகள் வாங்கி கொடுப்பதில் இருந்து சாப்பாடு வரை அனைத்தையும் ஒரு அண்ணனாக நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
TN Job “FB
Group” Join Now
இனி தன்னுடைய வீட்டில் வந்து அனைவரும் இருக்கும்படி தனது மாமனார் கூறியதற்கு, மாயன் மற்றும் நாச்சியார் இருவரும் மறுத்து விடுகின்றனர். நாச்சியார் தனது மருமகள் மஹாவிற்கு சீமந்தம் இந்த வீட்டில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை கேட்டு கொந்தளிக்கும் வடிவு, கையெழுத்து போட்டதற்கு பிறகு இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று கூறி மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post மஹாவிற்கு சீமந்தம் வைக்க ஆசைப்படும் நாச்சியார், கொந்தளிக்கும் வடிவு – இன்றைய எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3xI1m6r
via IFTTT
No comments:
Post a Comment