தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Thursday, August 26, 2021

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ‘இது’ கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ‘இது’ கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா தொற்று கேரள மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து தற்போது நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்து வருகிறது. கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகமாக உள்ளது இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பிப்பு – ஆகஸ்ட் 27 கடைசி நாள்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனவே வார இறுதி ஞாயிற்று கிழமைகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ‘இது’ கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3mtYKam
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture