தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 23, 2021

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இளநிலை கலந்தாய்வு, முதுநிலை விண்ணப்ப பதிவு!

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இளநிலை கலந்தாய்வு, முதுநிலை விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மேலும் முதுநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் தொடங்க உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கை போன்றவை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கியது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தொடர்ந்து இதற்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 30 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு, திரையரங்குகளுக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இதனையடுத்து இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. பள்ளி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை கொரோனாவினால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளதால், கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஒரு மாணவர் விருப்பப்பட்ட பாடத்தில் காலியிடம் இல்லாவிட்டால் வேறு பாடப்பிரிவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நகைக்கடைகள் இன்று மூடல் – புதிய ஹால்மார்க் விதி எதிர்ப்பு!!

இன்று தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் வன்னியர் இடஒதுக்கீடு, தியாகிகள் மற்றும் விதவைகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை போன்ற விதிகள் பின்பற்றப்பட உள்ளன. மறுபுறம் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குவதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது. இதற்காக அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இளநிலை கலந்தாய்வு, முதுநிலை விண்ணப்ப பதிவு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3goV99P
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture