தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, August 20, 2021

கண்ணம்மா பற்றி பாரதியிடம் சொல்லி ஏற்றிவிடும் வெண்பா, அஞ்சலியை கொல்ல திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

கண்ணம்மா பற்றி பாரதியிடம் சொல்லி ஏற்றிவிடும் வெண்பா, அஞ்சலியை கொல்ல திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி பற்றிய உண்மையை மறைத்ததால் பாரதி எல்லாரும் ஏமாத்துகிறார்கள் என வெண்பாவிடம் சொல்லி கவலைப்படுகிறார். ஆனால் வெண்பா கண்ணம்மா பற்றி பாரதியிடம் ஏற்றி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மாவின் மகள் என வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கு ஆனால் என்னிடம் மட்டும் சொல்லாமல் பொய் சொல்கிறார்கள். பொய் சொல்லி என்னிடம் நெருக்கமாக பழகவிடுகிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை என சொல்லி அழுகிறார். உடனே வெண்பா இதான் நல்ல சான்ஸ் என நினைத்து கண்ணம்மா பற்றி பாரதியிடம் குறை சொல்கிறார்.

ஒரு பக்கம் உன் பொண்ணு ஹேமாவிடம் நெருக்கமாக பழகுகிறார். இன்னொரு பக்கம் அவளது பொண்ணை உன்னிடம் பழக வைக்கிறார். இரண்டில் எது சரியாக வந்தாலும் அவளுக்கு தான லாபம். கண்ணம்மா சரியான மாஸ்டர் மைண்ட் தான் என்று சொல்கிறார். அவள் சொல்கிற மாதிரி சுய மரியாதை எல்லாம் இருந்தால் இப்படி செய்வாளா, லட்சுமி தான் உன் பொண்ணு என்று சொன்னால் நீ கோவப்பட்டு DNA டெஸ்ட் எடுத்துருவ, அப்பறம் அவளோட உண்மை எல்லாம் தெரிந்துவிடும் என சொல்கிறார். உடனே பாரதி நான் இனிமேல் DNA டெஸ்ட் எடுக்கமாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டதும் தான் வெண்பா நிம்மதி அடைகிறார்.

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1702 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

ஹேமா இன்னும் உன் வீட்டிற்கு வரலையே அவளை வந்து மிரட்ட போகிறாள் என்றுவெண்பா சொல்ல என்னால ஹேமாவை கூட்டிக் கொண்டு வர முடியும் என பாரதி சொல்கிறார். லட்சுமியை சௌந்தர்யா பாசத்துடன் சாப்பாடு கொடுக்க, லட்சுமி உங்க வீடு ஏன் இவ்வளவு பெருசா இருக்கு, கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கொடுக்கணும், என் கூட படிக்கிற பசங்க வீடு ரொம்ப சின்னது ஏன் இப்படி என்று கேட்கிறார். அவங்களாம் படித்து பெரிய ஆளாக மாறி அவங்க குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் என்று சொல்கிறார்.

அதன் பின்னர் நான் ஏன் இங்கே இருக்கேன், ஹேமாக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க எல்லாரும் இப்படி வீட்டிற்கு வருவார்களா எல்லாரையும் இப்படி பாசத்துடன் பார்த்துக் கொள்வீர்களா, நான் ஏன் உங்களை பாட்டி தாத்தா என்று கூப்பிடனும், நீங்க என்னோட பாட்டி, தாத்தாவா என்று கேட்கிறார். இதனை கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்க என்ன செய்வது என்று தெரியாமல் சௌந்தர்யா பேச்சை மாற்றிவிடுகிறார்.

‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல் – மிஷ்கினின் அடுத்த படம்!

பின்னர் வெண்பா அஞ்சலிக்கு போன் செய்து உடல்நிலை பற்றி கேட்கிறார். நீ சாகாமல் வாழ ஒரு மருந்து இருக்கிறது என்று சொல்லி அவளை நம்ப வைக்கிறார். பின்னர் சாந்தி அங்கே வர அஞ்சலியிடம் பேசியதை சொல்கிறார். உடனே சாந்தி அவளுக்கு சீக்கிரமாக மருந்து கொடுத்து அவளை சாமிகிட்ட சீக்கரம் அனுப்ப போறிங்களா என்று கேட்கிறார். அந்த மருந்து சீட்டில் பாரதியின் கையெழுத்து போட்டுக் கொடுங்க என்ன நடந்தாலும் பாரதி மேல பழியை போடலாம் என ஐடியா சொல்கிறார் சாந்தி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கண்ணம்மா பற்றி பாரதியிடம் சொல்லி ஏற்றிவிடும் வெண்பா, அஞ்சலியை கொல்ல திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3D5sRKS
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture