அற்புதம்மாள் கோரிக்கை ஏற்பு – பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பரோல் நீட்டிப்பு:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் குண்டுவெடிப்பு சம்பவம் சார்ந்த கொலையில் தமிழகத்தை சார்ந்த பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றி அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, இவர்கள் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பரவலாக அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அண்மையில், பதவி ஏற்ற முக ஸ்டாலின் தலைமையிலான அரசும் இவர்கள் விடுதலை குறித்து ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஆனால், இவர்கள் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். இந்த நிலையில் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த அறிக்கையும் ஆளுநர் இடத்தில் தரப்பட்டது. இதோடு சேர்த்து, இவர்கள் விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. இதனையடுத்து, அவர்கள் விடுதலை குறித்த நிலை தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அடிக்கடி பரோலுக்கு விண்ணப்பித்து வருவார். இதில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனின் பரோலை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post அற்புதம்மாள் கோரிக்கை ஏற்பு – பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3gzjQQY
via IFTTT
No comments:
Post a Comment