தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 24) கடைசி நாள் ஆகும்.
கடைசி நாள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
‘தடுப்பூசி செலுத்தாவிட்டால் கட்டாய விடுப்பு’ – தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிமுறைகள்!
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளது. இதுவரை பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்விற்கு 1 லட்சத்து 69 ஆயிரத்து 896 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 38 ஆயிரத்து 732 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 812 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 24) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடத்திட்டத்தின் அடிப்படை மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3ydB3Fw
via IFTTT
No comments:
Post a Comment