கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை கூடுதல் தளர்வுகளாக பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை காணப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் – அமைச்சர் தகவல்!
இதனால் அங்கு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் வாழ்வாதாரம் மீண்டுள்ளது என்று கூறினார். மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும், பூங்காக்களில் விளையாடவும் , பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெகு நாட்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
இந்த கூட்டம் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பை உருவாக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே தடுப்பு நடவடிக்கையாக கொடைக்கானலில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூக்கால் நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, டால்பினோஸ் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yfUGg1
via IFTTT
No comments:
Post a Comment