தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Thursday, August 19, 2021

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் – டிகோர் அறிமுகம்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் – டிகோர் அறிமுகம்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனமான டிகோர் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் ஷோ-ரூம்கள் மற்றும் இணையத்தில் இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ்:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனம் வாங்க தொடங்கி உள்ளனர். அதற்காக பல வாகனங்களில் புதிய வசதிகளுடன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் தற்போது இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனமான டிகோரை புதன்கிழமை அறிமுகம் செய்தது. இந்த வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோ ரூம்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்பதும் இதற்கான முன்பதிவு குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களுடன் ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு அடிக்கல் – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!!

இந்த காரை பெற முதற்கட்டமாக ரூ.21,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும். இந்த வண்டியின் சிறப்பம்சமாக 5.7 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும். பாஸ்ட் சார்ஜிங் (50 kW) முறையில் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வீடுகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கும். இதன் மூலம் 8.5 மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.60 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் ஏற்றும் பட்சத்தில் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்த காரின் விலை, கலர், மற்றும் இதர தகவல்கள் குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் – டிகோர் அறிமுகம்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3sytM1U
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture