மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – இதுதான் காரணம்! மாநகராட்சி விளக்கம்!
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மரத்திலிருந்து நீர் வடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாநகராட்சி சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் மரம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புற்றில் இருந்து பால் வருதல், மரத்தில் இருந்து நீர் வடிதல் போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதனை தொடர்ந்து மதுரையில் மரத்தில் இருந்து நீர் வந்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வேல்முருகன் நகரில் சாலையோரம் ஒரு வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து எதிர்பாராத நேரத்தில் நீர் வரத்தொடங்கியது. இதனை கண்ட மக்கள் வீட்டில் இருந்த காலி குடங்களை நிரப்ப தொடங்கினர்.
வங்கி காசோலை பரிவர்த்தனையில் புதிய Positive Pay System – RBI முக்கிய அறிவிப்பு!
மக்கள் வாளிகள், குடங்கள் போன்றவற்றில் தண்ணீர் பிடித்தது மட்டுமல்லாமல் பலர் இதை வேடிக்கை பார்க்க வந்தனர். இதனால் பழங்காநத்தம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சிலர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதனால் பழங்காநத்தம் பகுதியில் உள்ள வாகை மரம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
வாகை மரத்தில் இருந்து 45 நிமிடங்கள் நீர் பாய்ச்சி அடித்து சிறிது நேரத்தில் நீர் வரத்து நின்றது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுவதாவது, மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கும். இவ்வாறு தேங்கிய நீர் இது போன்று வெளியே வரலாம் என கூறினார். ஆனால் மரத்தின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தின் பேரில் மரத்தில் இருந்து தண்ணீர் வந்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – இதுதான் காரணம்! மாநகராட்சி விளக்கம்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yjqsZL
via IFTTT
No comments:
Post a Comment