ராஜேஷை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கும் கோபி, இனியாவை அழைத்து செல்ல வரும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூராவை வலுக்கட்டாயமாக அழைத்து செல்லும் ராஜேஷ், கோபி அவரை தடுக்கிறார். பின்னர் போலீஸ் வர அவரை பிடித்துக் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூராவை கூப்பிட ராஜேஷ் ஸ்கூலிற்கு சென்று அவளை கட்டாயப்படுத்தி காரில் ஏற்ற நினைக்கிறார். அப்போது அங்கே கோபி நிற்பதை பார்த்து மயூரா கத்துகிறார். அப்போது கோபியும், ராஜேஷும் சண்டை போடுகின்றனர். ஸ்கூலில் இருக்கும் அனைவரும் சேர்ந்து இருவரையும் தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். கோபியும் ஏற்கனவே ஏற்பாடு செய்த போலீசாருக்கு போன் செய்தார்.
அப்போது போலீசார் வர குழந்தையை கடத்த நினைக்கிறார் என்று கோபி சொல்கிறார். அப்போது இவள் என் குழந்தை தான் என்று ராஜேஷ் சொல்ல மயூராவிடம் கேட்கின்றனர். என் அம்மாவிடம் இருந்து என்னை பிரித்து அழைத்து செல்ல வந்திருக்கிறார். ஏற்கனவே என்னை காத்திருக்கிறார் என்று மயூரா சொல்ல, கோபி சொன்ன போலீசார் வந்து விடுகிறார்.
அப்போது ராதிகா அங்கே வர எதற்கு இங்கே வந்த என்று ராஜேஷிடம் சொல்ல அவள் என் குழந்தை என ராஜேஷ் சொல்கிறார். நீ யாரு அவளை அழைத்து செல்ல என்று சொல்ல போலீசார் அவனை பிடித்து இழுத்து செல்கின்றனர். கோபியும் நான் சொன்னவன் இவன் தான் என்று சிறிது நாட்களுக்கு வெளியே விடாதீங்க இந்த பொண்ணும் அவங்க அம்மாவும் சந்தோசமாக இருக்கட்டும் என சொல்கிறார்.
ராஜேஷை போலீசார் இழுத்து செல்ல இனியா பாக்கியாவிற்கு போன் செய்து கூட்டிக்கொண்டு போக யாரும் வரவில்லையா என கேட்கிறார். உன் அப்பா வந்தாரே என்று சொல்ல அப்பாவை இல்லை என்று இனியா சொல்கிறார். உடனே பாக்கியா ஜெனி இனியாவை கூப்பிட ஆட்டோவில் ஸ்கூலுக்கு செல்கின்றனர். அப்போது ஸ்கூலில் போலீசார் நிற்பதை பார்த்து என்ன என்று இனியாவிடம் கேட்க எதோ குழந்தையை கடத்த வந்தவராம் என இனியா சொல்கிறார்.
பின்னர் கோபி, ராதிகா மற்றும் மயூராவிற்கு தைரியம் சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே பாக்கியா நிற்பதை பார்த்த பின்னர் தான் இனியாவை அழைத்து செல்ல சொன்னது ஞாபகம் வருகிறது. உடனே ராதிகாவையும், மயூராவையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ராஜேஷை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கும் கோபி, இனியாவை அழைத்து செல்ல வரும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3k2wN6s
via IFTTT
No comments:
Post a Comment