தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது. பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் முன்னுரிமை பட்டியல் அறிவிக்கப்பட்டு அதன்படி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் – சூப்பர் மொபைல்!
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் அனைத்தும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பிற்கு, கல்லூரிகளும் திறக்க அனுமதி அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில்,தற்போது பள்ளி, கல்லூரி திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை செப்டம்பர் 2ம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசின் அதிரடி உத்தரவு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3mvKZaX
via IFTTT
No comments:
Post a Comment