ஜனார்தனனிடம் கண்ணனுக்கு உதவி செய்ய கேட்கும் மீனா, உடம்பு சரி இல்லாமல் போன மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனுக்கு உதவி செய்யுமாறு தனது அப்பாவிடம் உதவி கேட்கிறார் மீனா. ஜனார்தனனும் உதவி செய்ய சம்மதம் தெரிவிக்கிறார். மூர்த்திக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவும், கதிரும் கடையில் இருக்க முருகன் அங்கே வருகிறார். மூர்த்தி இல்லையா என்று கேட்க, இல்லை மாமா எதுவும் பிரச்சனையா என கேட்கிறார். இல்ல மாப்பிள்ளை, கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என மல்லி சொன்னார். இதனை வருடங்கள் கழித்து மல்லி எங்களிடம் பேசுகிறார். மீண்டும் அவரை எங்களால் பகைத்துக் கொள்ள முடியாது என சொல்கிறார்.
இரண்டு பேரும் கிளம்பி போய்விட்டார்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்று சொல்கிறார். அதான் உங்களிடம் சொல்லிவிட்டு போகிறோம் என சொல்கிறார். முல்லை தனத்திடம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு அனுப்பிட்டார்களாம் என சொல்கிறார். அதை கேட்டு தனம் அதிர்ச்சி அடைகிறார். அந்த பிள்ளையை கூட்டிக் கொண்டு அவன் எங்கே போவான் தேவையில்லாத பிரச்சனை என்று சொல்ல, தனம் ஒன்றும் பேசாமல் கிளம்புகிறார்.
ஐஸ்வர்யாவை கூட்டிக் கொண்டு கோவில் ரோட்டில் இருக்கிறானே ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என மீனா கேட்கிறார். மீனா கயலை முல்லையிடம் கொடுத்துவிட்டு தனது வீடு வரை போய்விட்டு வருகிறேன் என்று சொல்கிறார். தனம் லட்சுமி அம்மா இப்படி பேசாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார். தனத்தின் அம்மா அவங்க வாழ்ந்து முடித்துவிட்டார்கள், இனி நீ உன் குழந்தையை தான் பார்க்க வேண்டும் என தனத்தின் அம்மா சொல்கிறார்.
மீனா தனது அப்பா கடைக்கு சென்று கண்ணன் பற்றி பேசுகிறார். கண்ணன் தங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறான் அவனுக்கு உதவி செய்யுமாறு சொல்கிறார். அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது அவன் ஆளும் மூஞ்சியும் என்று சொல்ல, அவன் எப்படி வேணாலும் இருக்கட்டும் ஆனால் அவனோடு ஒரு பொண்ணு இருக்கா அதுனால எதாவது தங்க இடம் கொடுங்க, நம்ம வீட்டில் வேணாம் வேற எதாவது சின்ன ரூம் கூட போதும் என சொல்ல, மூர்த்திக்கும் மாப்பிள்ளைக்கும் தெரிந்தால் மீண்டும் பிரச்சனை வரும் என சொல்கிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!
அதெல்லாம் ஒன்னும் வராது, நேற்று முல்லை வீட்டில் தான் இருந்தார், ஆனால் யாரும் எதுவும் சொல்லலையே என்று மீனா கெஞ்சி கேட்கிறார். உனக்காக நான் இதை செய்கிறேன் என்று ஜனார்த்தனம் ஒத்துக் கொள்கிறார். மூர்த்தி கடையில் இருக்க ஒரு மாதிரி இருக்கிறார். உடம்புக்கு எதுவும் செய்கிறதா என கதிர் கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறார்.
கதிர் அங்கிருந்து கிளம்ப மூர்த்தி எந்திரித்து நிற்க முடியமால் கீழே விழ போகிறார். உடனே கதிர் அங்கிருந்து வந்து அவரை பிடிக்கிறார். என்னாச்சு என்று கேட்க ஒன்றுமில்லை ஒரு மாதிரி படபட என வருகிறது என சொல்கிறார். டாக்டரிடம் போவோமா என சொல்ல ஜீவாவிற்கு போன் செய்து டாக்டரை அழைத்து வரும்படி சொல்கிறார். டாக்டர் மூர்த்தியை பரிசோதித்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஜனார்தனனிடம் கண்ணனுக்கு உதவி செய்ய கேட்கும் மீனா, உடம்பு சரி இல்லாமல் போன மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3D28fmW
via IFTTT
No comments:
Post a Comment