தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, August 20, 2021

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைப்பதற்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இம்மாதிரியான வகுப்புகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் பெரும் துயர் அடைந்து வந்தனர்.

ஆப்கனில் இருந்து தப்பிக்க முயன்ற இளம் கால்பந்து வீரர் – நடுவானில் தவறி விழுந்து மரணம்!

நாளுக்கு நாள் நோய் தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதனால் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசு பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கருத்துக்களை கேட்ட பின் செப்.1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது என அறிவித்தது. அதனை தொடர்ந்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தின் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – செப்டம்பர் 1 முதல் அமல்!!

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 20 மாணவர்கள் வீதம் பாடம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு பின்பு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. எனவே முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பு தொடர்பான இறுதி முடிவை வெளியிடுவார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2XCyr7n
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture