தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு – வாகன வரி செலுத்த கால அவகாசம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவான நிலையில், தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. இருந்த போதிலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட மேலாளர் சுற்றறிக்கை!!
இந்நிலையில் வாகனங்களுக்கு ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி செலுத்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தலைதூக்கி இருந்தது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகளும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதனால் வாகன வரி செலுத்த கால அவகாசம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – RBI அறிவிப்பு வெளியீடு!!
ஆனால் தற்போது மீண்டும் ஊரடங்கு 2 வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளதால் ஆண்டு வரிக்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு – வாகன வரி செலுத்த கால அவகாசம்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3ydL7hN
via IFTTT
No comments:
Post a Comment