பார்வதியை விக்கியிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியலில், பார்வதி விக்கி சொன்ன இடத்திற்கு செல்கிறார். அங்கே சந்தியாவின் திட்டத்தின் படி விக்கி போனில் போட்டோவை அழித்து விடுகிறார். பின்னர் சந்தியா விக்கியின் அப்பாவை சந்தித்து ஹார்டு டிஸ்க் பற்றி கேட்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் திட்டத்தின் படி பார்வதி விக்கியை சந்திக்க செல்கிறார். விக்கி அவளை தனியாக அழைத்து சென்று ரூமில் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். பார்வதி தடுத்துக் கொண்டே இருக்க சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை சுற்றி வருகிறார். அதன் பின்னர் விக்கிக்கு அவன் நண்பன் போன் செய்கிறார். விக்கி அதில் பேசிக் கொண்டிருக்க யாரோ கதவை தட்டுவது போல உள்ளது.
உடனே போனை வைத்துவிட்டு விக்கி வெளியே செல்கிறார். அப்போது பார்வதி விக்கி போனை எடுத்து வெளியே வந்து சந்தியாவை தேடுகிறார். ஆனால் சந்தியாவை காணவில்லை. உடனே என்ன செய்வது என்று தெரியாமல் போனை தூக்கி எறிந்துவிட்டு எதுவும் தெரியாமல் உள்ளே சென்று உட்காந்திருக்கிறார். வெளியே எதாவது தேவை என்றால் கூப்பிடுறேன் என சொல்லி விக்கி உள்ளே வருகிறார்.
சந்தியா நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை என குழப்பத்தில் இருக்க, கீழே போன் ஒன்று கிடக்கிறது. அதை எடுத்து பார்த்தல் அது லாக் செய்யப்பட்டுள்ளது. சந்தியா லாக் எடுத்து எப்படியோ போனை சரி செய்கிறார். தனது போனை காணவில்லை என தேட போட்டோவை அழிக்க நீ தான எடுத்த என விக்கி கேட்கிறார். பார்வதி எனக்கு தெரியாது என சொல்ல, கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. விக்கி சென்று கதவை திறக்க சந்தியா கட்டையை வைத்து தலையில் அடிக்கிறார்.
பின்னர் விக்கியிடம் போனை கொடுத்துவிட்டு இனிமேல் பிளாக்மெயில் செய்யாதே என எச்சரிக்கிறார். இதில் மாட்டும் போட்டோ இல்லை ஹார்ட்டிஸ்கில் போட்டோ உள்ளது என சொல்லி விக்கி சிரிக்கிறார். உடனே சந்தியா விக்கி வீட்டிற்கு செல்கிறார். அப்போது அங்கே விக்கியின் அப்பாவாக எம்எல்ஏ ஒருவர் நிற்கிறார். அவரை பார்த்ததும் ஏற்கனவே தப்பான எம்எல்ஏ வை போலீசில் பிடித்துக் கொடுத்தது சந்தியாவிற்கு ஞாபகம் வருகிறது.
உங்க பையன் எங்க வீடு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுறான். அவனது ரூமில் எங்க வீட்டு பொண்ணு ஹார்ட்டிஸ்க் உள்ளது அதை எடுத்துவிட்டு நான் போயிருவேன் என சொல்கிறார். இல்லையென்றால் போலீசில் பிடித்து கொடுப்பேன் அப்பறம் எம்எல்ஏ பையன் போலீசில் என்று ஊரெல்லாம் பேசும் என சொல்கிறார். உடனே விக்கியின் ரூமிற்கு சந்தியா செல்ல அனுமதி வழங்குகிறார்.
சந்தியா விக்கி ரூமில் சென்று தேடி பார்த்து ஹார்ட்டிஸ்க்கை எடுக்கிறார். இனிமேல் உங்க பையனை பார்த்து இருக்க சொல்லுங்க என்று எச்சரிக்கிறார். ஆட்டோவிற்கு சென்று விக்கியை இழுத்து வெளியே தள்ளுகிறார். எம்எல்ஏ தன் மகனின் நிலைமையை நினைத்து ஓடி வந்து காட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post பார்வதியை விக்கியிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3BbpXCA
via IFTTT
No comments:
Post a Comment