தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு 2950 குடும்ப அட்டைகள் – அமைச்சர் அதிரடி!
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் வரை 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
புதிய குடும்ப அட்டைகள்:
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த நிலையில், புதிய அரசு ஆட்சி அமைத்த போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துறைகளில் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல்வர் மற்றும் அவைத்தலைவர் தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை சார்பாக விவாதங்கள் நடந்தது குறிப்பிடத்தகுந்தது.
கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்களில் மாற்றம்!
இன்று நுகர்வோர் மற்றும் உணவு பொருள் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், மாநிலத்தில் இதுவரை புதிதாக மே மாதம் 7ம் தேதியில் இருந்து இப்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், மலை கிராமம் மற்றும் மக்கள் எளிதில் சென்று வர முடியாத இடங்களுக்கு புதிய ரேஷன் கடைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இதோடு சேர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி 2007-ல் துவக்கி வைத்த திட்டமான, குறைந்த விலையில் ரேஷனில் வழங்கப்பட்டு வந்த சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்களின் சிறப்பு பொது விநியோக திட்டமானது வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இது மட்டுமல்லாமல் குடும்பங்களோடும், அது இல்லாமல் தனித்து வாழும் மூன்றாம் பாலினத்தவருக்கு புதிதாக 2950 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு 2950 குடும்ப அட்டைகள் – அமைச்சர் அதிரடி! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/2UMllUb
via IFTTT
No comments:
Post a Comment