தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,916 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பரவலை பூஜ்யத்திற்கு கொண்டு வருவதற்கு அரசு முயற்சி வரும் நிலையில், இன்று மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலை அரசு பல தீவிர நடவடிக்கைகளின் மூலம் முடிவு கொண்டு வர போராடுகிறது. ஆனால் தொற்று அரசின் அனைத்து முயற்சிகளையும் தவிடு பொடியாக்குகிறது.முன்னதாக சில வாரங்களுக்கு முன் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் திடீரென்று சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – விண்ணப்பக் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!
அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,86,885 ஆக அதிகரித்துள்ளது.இன்று 34 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 34,496 ஆக உள்ளது. தனியார் மருத்துவமனையில் 12 பேர் மற்றும் அரசு மருத்துவமனையில் 22 பெரும் பலியாகியுள்ளனர். இன்று மேலும், 1,866 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 25,31,962 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 219 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 5,40,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,96,45,946 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,59,684 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,916 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yN5Dql
via IFTTT
No comments:
Post a Comment