ஆகஸ்ட் 16ம் தேதி அவதூறு வழக்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆஜர் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
அவதூறு வழக்கு:
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவின் முன்னாள் தலைவர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை ஒட்டி அவர் கர்நாடகா சிறையில் இருக்க அரசு உத்தரவிட்டது. இதனால் அதிமுக வை சேர்ந்த பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர், கட்சி உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2020 நவம்பர் மாதம் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தமிழக மக்களின் மனநிலை குறித்தும், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயகுமார் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கினை எடப்பாடி பழனிச்சாமி தொடுத்தார். இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த போது மூன்று முறை முக ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் முக ஸ்டாலின் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி டி.சிவகுமார் ஆகஸ்ட் 16ம் தேதி நீதிமன்றத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆகஸ்ட் 16ம் தேதி அவதூறு வழக்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆஜர் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yEcimT
via IFTTT
No comments:
Post a Comment