தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Wednesday, August 11, 2021

தமிழகத்திற்கு 1,08,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!

தமிழகத்திற்கு 1,08,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!

மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள 1,08,000 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் ஆகஸ்ட் 10ம் தேதி புனேவில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வந்துளளது.

மத்திய அரசு ஒதுக்கீடு:

இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதலின் படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல், முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டது.

நாட்டில் இதுவரை 52 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்நிலையில் மீண்டுமாக மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். மேலும், தமிழகம் தடுப்பூசியை முறையாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால், தமிழக அரசு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், மத்திய அரசு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்துக் கிடங்கிலிருந்து 1,08,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தது. கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 9 பார்சல்கள் புனேவிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்திற்கு 1,08,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2U7mtBj
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture