தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Sunday, March 14, 2021

IAS,IPS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

 IAS, IPS பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இப்போது UPSC-ன் Civil Service முதல் நிலை தேர்வுக்கு (Primary Exam) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 24 (24-03-2021)


இந்திய அரசு பணியில் மிக உயந்த பதவிகளாக கருதப்படுவது IAS, IPS, IFS, IRS உட்பட 25 அதிஉயர் பணிகள், இந்த பணிகளில் சேர மத்திய அரசின் UPSC வருட வருடம் Civil Service தேர்வுகளை நடத்துகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட பல அரசு உயர் பதவிகளில் சேர கனவு காணும் மாணவர்களின் விருப்ப தேர்வாக இந்த Civil Service தேர்வுகள் உள்ளன.

இந்த ஆண்டு 712 பணியிடங்களுக்கு இந்த தேர்வு வரும் ஜூன் 27 (27-06-2021) நடக்க விருக்கின்றது. அதன் விபரங்களை பார்ப்போம்.


கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any Degree), இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு :  பொது பிரிவு : 32,  SC/ST : 37, OBC : 35


தேர்விற்க்கு விண்ணப்பிக்க : 


https://upsconline.nic.in இணையதளத்தில் Online-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பக்கம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். தேர்வு கட்டணம் ரூ.100, விண்ணப்பிக்க கடைசி தேதி  மார்ச் 24 (24-03-2021), தேர்வுகள் தமிழகத்தில் சென்னை , மதுரை . கோவை, , வேலூர் மற்றும் பாண்டிசேரியில் நடைபெறும்


Civil Service முதல் நிலை தேர்வு (Primary Exam) பற்றிய விபரம் :


இந்த தேர்வு இரண்டு தாள்களை கொண்டது, இரண்டு தாள்களிலும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும். 


முதல் தாளில் 200 மதிபெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடக்கும். இதில் நடப்பு நிகழ்வுகள் (current affairs), இந்திய வரலாறு, பொருளாதாரம், சூழ்நிலையியல், பொது அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்படும்.


இரண்டாம் தாள் 200 மதிபெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடக்கும். இதில் பகுத்தறிவு (Logical Reasoning, Analytical ability, Mental Ability, Comprehension, Problem solving) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும்

இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படும்.


சேர்க்கை முறை :

இது 3 கட்டங்களாக நடைபெறும் . முதற் கட்ட தேர்வு (PRELIMINARY), இரண்டாம் நிலை (Main) தேர்வு, நேர்முக தேர்வு (Interview).

  

முதல் நிலை  (PRELIMINARY) தேர்வில் தேர்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலை (Main) தேர்விற்க்கு அழைக்கபடுவார்கள். இரண்டாம் நிலை (Main) தேர்வு எழுத்து தேர்வாக இருக்கும். இரண்டாம் கட்ட (Main) தேர்வில் தேர்சி பெறுபவர்கள், நேர்முக தேர்வின் (Interview) மூலம் தேர்ந்தெடுக்க பட்டு  பயிற்ச்சிக்கு பிறகு அரசு பணிகளில் நியமிக்க படுவார்கள்.


Civil Service முதல் நிலை தேர்வு (Primary Exam) பற்றிய முழு விபரங்கள் இந்த https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021N.pdf லின்கில் உள்ளது.

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture